June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

முருகனின் திரு அவதாரம் எப்படி? /அமுதன்

1 min read

How is the incarnation of Murugan? By Amuthan

16-/11/2020
குன்று இருக்கும் இடங்களில் எல்லாம் குடி இருப்பவன் குகன்.
உலகில் குன்றுகள் இல்லாத இடம் ஏது?
அந்த வகையில், உலகம் முழுவதும் வியாபித்து இருக்கும் உமையவன் மகனான, முருகனின் பக்தர்கள் விரதம் மேற்கொள்ளும் Ôசஷ்டி விரதம்Õ தொடங்கி விட்டது.
உலகம் உய்விக்க வந்தவன் கந்தன். உலகுக்கு வந்ததால் அவனது அவதாரம் ஒரு வகையில் மனித சம்பந்தப்பட்டது என்றால் வியப்பாக இருக்கும்.
அவதாரம் என்றால் பிறப்பெடுத்தல் என்பது அர்த்தம் அல்ல. அவதாரம் என்பதற்கு Ôஇறங்கி வருதல்Õ என்று பொருள்.
அப்படி பூமிக்கு இறங்கி வந்தவன்தான், ஈசனின் இளைய மகன்.
மனிதனின் உடல், ஆகாயம், அக்னி, காற்று, நீர், நிலம் ஆகிய ஐந்து பூதங்கள் ஒன்று சேர்ந்து உருவானது ஆகும்.
இறைவன், மனித ரூபத்தில், இந்த பூமிக்கு இறங்கி வந்து மக்களுக்கு அருள் செய்ய வேண்டும் என்றால், அவ ம் இந்த ஐந்து பூதங்கள் சம்பந்தப்பட்டு இருக்க வேண்டும் அல்லவா?
கங்கா நதி பாலன், ஐந்து பூதங்கள் சம்பந்தப்பட்டே மனித ரூபத்தில் பூலோகத்திற்கு இறங்கி வந்தான்.
சிவனின் நெற்றிக் கண் அக்னி மயமானது. அந்த அக்னியில் இருந்து அவன் புறப்பட்டதால் அவ க்கு அக்னி தொடர்பு ஏற்பட்டு விட்டது.
அக்னிப் பொறியாக இருந்த அனகன், ஆகாயம் வழியாக பூமிக்கு இறங்கினான். இதனால் அவ க்கு ஆகாயம் தொடர்பு ஏற்பட்டு விட்டது.
அக்னிப் பொறியாக இருந்த அவனை, வாயு ஏற்றுக் கொண்டு வந்ததால், வேலாயுத க்கு வாயு தொடர்பு ஏற்பட்டு விட்டது.
தாங்க முடியாத அக்னிப் பொறியாக இருந்த சண்முகன், குளிர்ந்த சரவணப் பொய்கையில் விடப்பட்டான். இதனால் அவ க்கு நீர் தொடர்பு ஏற்பட்டு விட்டது.
கார்த்திகைப் பெண்கள் அவனை எடுத்து பூமியில் விட்டனர். இதனால் கார்த்திகேய க்கு நிலம் தொடர்பு ஏற்பட்டு விட்டது.
இவ்வாறு, ஆகாயம், அக்னி, காற்று நீர், நிலம் ஆகிய ஐந்து பூதங்கள் தொடர்பால் நம்மை ஆட்கொள்வதற்காக பூமிக்கு இறங்கி வந்தான், குமரேசன்.
ஆறு குழந்தைகளாக இருந்த விசாகனை, உமையவள் தனது திருக்கரங்களால் ஏந்தி, ஆறு முகமும் பன்னிரு கரங்களும் கொண்ட கருணாமூர்த்தியாக நமக்கு வழங்கினாள். இதனால் அவன் கந்தன் எனப் பெயர் பெற்றான்.
பூலோகத்திற்கு இறங்கி வந்து, மயில் மேல் ஏறி உலகெலாம் வலம் வரும் மயில்வாகனனை வணங்கினால், நமக்கு முக்தி கிடைப்பது நிச்சயம்.
(கட்டுரையாளர்: தந்தி பதிப்பு வெளியிட்ட Ôபழங்கால இந்தியர்களின் விஞ்ஞானம்Õ என்ற நூலின் ஆசிரியர் அமுதன். தொடர்புக்கு: [email protected] ).

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *