May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

சுப்பிரமணியபுரம் சுவாதி மீண்டும் நடிக்க வருகிறார்

1 min read

Subramaniapuram Swathi is back in action

26/11/2020

சுப்பிரமணியபுரம் படத்தின் நாயகி சுவாதி மீண்டும் நடிக்க வருகிறார்.

நடிகை சுவாதி

தமிழில் சுப்பிரமணியபுரம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சுவாதி. இந்தப் படம் வெற்றிபெற்றதை அடுத்து நடிகை சுவாதியும் மிகவும் பிரபலமானார்.
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகை சுவாதி கனிமொழி, போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, எட்சன் உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார். தெலுங்கில் அதிக படங்களில் நடித்தார்.

கடந்த 2018-ம் ஆண்டு சுவாதிக்கும், கேரளாவை சேர்ந்த விமானி விகாஸ் என்பவருக்கும் காதல் மலர்ந்தது. பின்னர் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

மீண்டும்..

திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகி கணவருடன் இந்தோனேசியாவில் குடியேறினார். தற்போது ஐதராபாத்துக்கு திரும்பி பெற்றோருடன் வசிக்கிறார். சுவாதி மீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறார். சில படங்களில் நடிக்க வாய்ப்புகளும் வந்துள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.