May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

பிக்பாஸ் வீட்டை வெள்ளம் சூழ்ந்தது; போட்டியாளர்கள் வெளியேற்றம்

1 min read

The Big Boss house was flooded; Eviction of competitors

26/11/2020

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த வீட்டை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் து போட்டியாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

பிக் பாஸ்

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ்பிக்பாஸ் ஒளிபரப்பாகிறது. தற்போது சீசன் 4 ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சிக்காக செம்பரம்பாக்கத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் ஈவிபி ஸ்டுடியோவில் தான் செட் போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நிவர் புயல் தாக்குதலை அடுத்து சென்னையின் அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நேற்று(புதன்கிழமை) இரவு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் சென்னையின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

பிக்பாஸ் செட் வீட்டை தண்ணீர் சூழ்ந்தது. அந்த ஸ்டூடியோ முழுவதுமே வெள்ளத்தால் சூழ்ந்துவிட்டதாகவும், பிக்பாஸ் வீட்டில் கூட தண்ணீர் புகுந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

வெளியேற்றம்

இதனால் போட்டியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அவர்கள் பூந்தமல்லியில் உள்ள ஸ்டார் ஓட்டலில் நேற்று இரவு தங்க வைக்கப்பட்டனர்.

தற்போது மழை நின்று விட்டதை அடுத்து வெள்ள நீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தண்ணீரை வெளியேற்றினால்தான் நாளைய பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும். இல்லை என்றால் நாளைய நிகழ்ச்சியில் பழைய காட்சிகள் ஒளிபரப்பப்படும் என்று கூறப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.