May 16, 2024

Seithi Saral

Tamil News Channel

நடிகை ஜெயசித்ராவின் கணவர் மரணம்

1 min read

Actress Jayachitra’s husband died

4/12/2020

நடிகை ஜெயசித்ராவின் கணவர் மரணம் அடைந்தார்.

ஜெயசித்ரா

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சிவகுமார், ரஜினி, கமல் உள்பட பலருடன் நடித்தவர் நடிகை ஜெயசித்ரா. இவர் நடித்த குறத்தி மகன் படத்தில் மிகவும் பிரபலமானார்.
இவர் தமிழ் மட்டுமின்றி ஏராளமான தெலுங்கு படங்களிலும் மலையாளம் கன்னடம் படங்களிலும் நடித்துள்ளார்.

கணவர் மரணம்

ஜெயசித்ராவின் கணவர் கணேஷ். இந்த நிலையில் ஜெயசித்ராவின் கணவர் கணேஷ் என்பவர் இன்று திருச்சியில் இன்று மரணம் அடைந்தார்.
ஜெயசித்ராவின் கணவரின் மறைவை அடுத்து திரை உலகத்தை சேர்த்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மரணம் அடைந்த கணேஷ் கும்பகோணத்தில் பிறந்தார். அவர் ஒரு படத்திலும் நடித்துள்ளார்.
நடிகை ஜெயசித்ரா கடந்த 1983-ம் ஆண்டு கணேஷை திருமணம் செய்து கொண்டார். ஜெயசித்ரா-கணேஷ் தம்பதிக்கு அம்ரிஷ் என்ற மகன் உள்ளார். இவர் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.