May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

திரிசம்2 படம் 19ந் தேதி ஓடிடி-யில் வெளியீடு

1 min read

Trisam 2 is released on ODT on the 19th

6.2.2021

திரிஷ்யம் 2 படம் வருகிற 19ந் தேதி ஓடிடி&யில் வெளியிடப்படுகிறது.

திரிஷ்யம் 2

மோகன்லால், மீனா நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் திரிஷ்யம். பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனை கொலை செய்த மகளை காப்பாற்ற போராடும் தந்தை பற்றிய கதை. ரூ.5 கோடி செலவில் உருவான இந்த படம் ரூ.75 கோடி வசூல் குவித்தது. இந்தப் படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார்.

இதன் வெற்றி இந்தியா முழுவதும் அனைத்து மொழி திரையுலகினரையும் திரும்பி பார்க்க வைத்தது. திரிஷ்யம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் கமல்ஹாசன், கவுதமி ஆகியோர் நடித்தனர். இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் சீன மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

19 ந் தேதி

தற்போது 7 வருடங்களுக்கு பிறகு திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தை ஜீத்து ஜோசப் இயக்கி உள்ளார். இதிலும் மோகன்லாலே ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மீனா நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

இந்தப் படத்தின் டிரைலர் இன்று ( சனிக்கிழமை) வெளியானது. மேலும் இந்த படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வருகிற (பிப்ரவரி) 19 ந் தேதி வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.