May 14, 2024

Seithi Saral

Tamil News Channel

தற்கொலை செய்த சித்ரா நடித்த சினிமா படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

1 min read

Chitra starrer movie release date announced

13.2.2021

மறைந்த டெலிவிஷன் நடிகை சித்ரா நடித்த முதல் சினிமா படமான “கால்ஸ்” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை சித்ரா

டெலிவிஷனில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் சித்ரா. அதன்பின் அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
சமீபத்தில் இவர் தற்கொலை செய்து கொண்டது இன்றும் அவரது ரசிகர்களால் ஏற்று கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது. அதன்பின் அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அவர் நடித்த படம்தான் “கால்ஸ்”.

இந்த படத்தில் சித்ரா கால் சென்டரில் வேலை செய்யும் கனவுகள் நிறைந்த தைரியமான பெண் கதாபாத்திரத்தில் நடித்தார். திரைப்பட கல்லூரியில் பயின்று வரும் மாணவரான ஜே.சபரீஷ் என்பவர் இந்த படத்தினை இயக்கி இருக்கிறார்.
இந்தபடம் வெளிவரும் முன்பே சித்ரா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கால்ஸ்

இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் கால்ஸ் திரைப்படத்தினை வருகிற (பிப்ரவரி) 26-ந் தேதி திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.