June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

இளைய ராஜாவின் ஸ்டுடியோவுக்கு வந்த ரஜினிகாந்த்

1 min read

Rajinikanth came to the studio of the younger Raja

17.2.2021

இசையமைப்பாளர் இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வந்து பார்வையிட்டார்.

இளையராஜா

இசை அமைப்பாளர் இளையராஜா சென்னை கோடம்பாக்கத்தில் ‘இளையராஜா ஸ்டுடியோ’ என்ற பெயரில் புதிய ஸ்டுடியோ ஒன்றை அமைத்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் இசைப்பணிகள் மூலமாக புதிய ஸ்டுடியோவில் தனது பணிகளைத் தொடங்கினார். அன்றைய தினம் பல்வேறு திரையுலக பிரபலங்கள் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

ரஜினிகாந்த்

இந்த நிலையில் நேற்று நடிகர் ரஜினிகாந்த் இளையராஜா ஸ்டுடியோவுக்கு சென்றார். அங்கு நடக்கும் இசைப் பணிகளை அமர்ந்து பார்த்தார். அதன்பின் அவர்கூறும்போது இங்கு வந்தது கோவிலுக்குள் வந்தது போன்ற உணர்வு தனக்கு ஏற்பட்டதாக இளையராஜாவிடம் கூறினார். மேலும் ஸ்டுடியோவிலும் இளையராஜாவுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

இன்றும் ரஜினிகாந்த் மீண்டும் இளையராஜா ஸ்டுடியோவுக்கு வந்தார். அங்கு நடக்கும் இசைப் பணிகளை அமர்ந்து பார்த்தார். ரஜினி வந்த படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *