அறிவோம் தேர்தல் வரலாறு/ 1957: மீண்டும் காமராஜர் ஆட்சி
1 min read
Knowledge Election History / 1957: Kamaraj rule again
16/3/2021
சுதந்திர இந்தியாவின் 2&வது தேர்தல் 1957&ம் ஆண்டு நடந்தது. 52&ல் மதராஸ் மாகாணத்துடன் இருந்த பல பகுதிகள் பிரிக்கப்பட்டு ஆந்திரா, கர்நாடகம், கேரளம் என மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டு விட்டன. இதனால் 375 ஆக இருந்த மதராஸ் மாகாண சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 205 ஆக குறைந்து விட்டது. (அதாவது 167 தொகுதிகள்&205 உறுப்பினர்கள். 38 தொகுதிகள் இரட்டை உறுப்பினர் தொகுதிகளாக இருந்தன).
இந்தத் தேர்தலில் களம் கண்ட கட்சிகள்: காங்கிரஸ், கம்யூனிஸ்டு, பார்வர்டு பிளாக், சோசலிஸ்டு, பிரஜா சோசலிஸ்டு, காங்கிரஸ் சீர்திருத்த காங்கிரஸ், திமுகழகம்.
சீர்திருத்த காங்கிரஸ் என்பது ராஜாஜி தொடங்கிய காங்கிரசின் போட்டிக்கட்சி. காங்கிரசை விட்டு வெளியேறிய அவர், எனது தலைமையிலான கட்சி தான் இந்திய தேசிய ஜனநாயக காங்கிரஸ் என்று கூறிக்கொண்டார்.
காமராஜர் தலைமையில் காங்கிரஸ் வலுவாக இருந்த நிலையில் தேர்தலை சந்தித்தது. அவருக்கு திராவிடர் கழகம் முழு ஆதரவு வழங்கியது. இது காங்கிரசில் சிலருக்குப் பிடிக்கவில்லை என்றாலும், திகவின் ஆதரவை காமராஜர் ஏற்றுக்கொண்டார்.
திமுகழகம் முதல் முறையாக இந்தத் தேர்தலில் தான் களம் கண்டது. ஆனால் அது அப்போது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. எனவே அதன் வேட்பாளர்கள் சுயேச்சைகளாகத்தான் கருதப்பட்டார்கள்.
1957 மார்ச்சில் நடந்த இந்தத் தேர்தலின் போது மொத்த வாக்காளர்கள் 2,39,05,575 பேர். வாக்களித்தவர்கள் 1,11,30,996 பேர். வாக்குப்பதிவு சதவீதம் 46.56.
காங்கிரஸ் அமோக வெற்றி
தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு பெருவெற்றியைத் தேடித்தந்தன. பெரும்பான்மைக்கு 103 இடங்களே தேவை என்ற நிலையில் காங்கிரஸ் 151 இடங்களை வென்றது. அதற்கு அடுத்தபடியாக ராஜாஜியின் சீர்திருத்த காங்கிரஸ் 16 இடங்களை கைப்பற்றியது.
யாருமே எதிர்பாராத வகையில் திமுகழகம் சார்பில் சுயேச்சைகளாகப்போட்டியிட்ட 15 பேர் வெற்றி பெற்றனர். இதன் மூலம் சட்டமன்றத்தில் 3&வது இடத்தில் திமுக அமர்ந்தது. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான கம்யூனிஸ்டு, பிரஜா சோசலிஸ்டு ஆகியவை ஒற்றை இலக்கத் தொகுதிகளை மட்டுமே வென்று காணாமல் போயின.
சாத்து£ரில் காமராஜர் வெற்றி
1954 இடைத்தேர்தலில் குடியாத்தத்தில் போட்டியிட்டு வென்ற கமாராஜர், இம்முறை சாத்து£ர் கொகுதியில் வெற்றி பெற்று 2&வது முறையாக முதல்&அமைச்சர் பதவி ஏற்றார். அவரது அமைச்சரவையில், பக்தவச்சலம், சி. சுப்பிரமணியன், ஆர். வெங்கட்ராமன், மாணிக்கவேலு நாயக்கர், கக்கன், ராமையா, லு£ர்தம்மாள் சைமன் ஆகியோர் அமைச்சர்களாகப் பொறுப்பு ஏற்றனர்.
ஏற்கனவே ஏழை மாணவர்களின் நலன் கருதி ஆட்சி செய்த காமராஜர் அதன் தொடர்ச்சியாக இம்முறையும் பள்ளிகள் பல உருவாக்கியும், மதிய உணவுத்திட்டத்தை செம்மையாக அமல் படுத்தியும் அடுத்த தேர்தல் வரை நிலையான ஆட்சி தந்தார்.
(அடுத்து, 1962 தேர்தல் நிலவரத்தைப் பார்ப்போம்).
–&மணி, நெல்லை.