May 6, 2024

Seithi Saral

Tamil News Channel

கார்த்தியுடன் ஜோடி சேரும் டைரக்டர் ஷங்கர் மகள்

1 min read

விருமன் படத்தில் அதிதி ஷங்கர்

Daughter of director Shankar who will be pairing up with Karthi

திரைப்பட இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிகர் கார்த்தி ஜோடியாக நடிக்கிறார். கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்கை நடிகர் சூர்யா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

சூர்யாவின் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான 2D என்டர்டைன்மென்ட் சார்பாக, கார்த்தி கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருந்தார்.

இதைத்தொடர்ந்த நடிகர் சூர்யா தயாரிப்பில் மீண்டும் அவரது சகோதரர் கார்த்தி நடிக்கும் படத்தை முத்தையா இயக்குகிறார். இவர் ஏற்கனவே கார்த்தி நடிப்பில் கொம்பன் படத்தை இயக்கியிருந்தார். இந்த நிலையில் சூர்யா தயாரிப்பில் மீண்டும் கார்த்தி – முத்தையா இணையும் படத்திற்கு விருமன் என தலைப்பு வைத்துள்ளனர்.

படத்தின் தலைப்போடு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார் நடிகர் சூர்யா. யுவன் இசையமைக்கிறார். இப்படத்தின் கூடுதல் சிறப்பு என்னவென்றால் விருமன் திரைப்படத்தின் மூலம் பிரமாண்ட திரைப்பட இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நாயகியாக அறிமுகமாகிறார். கார்த்தி- அதிதி ஷங்கர் இப்படத்தில் நாயகன்- நாயகியாக நடிக்கிறார்கள். இதனாலேயே இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.