April 26, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரத்தை கலக்கிய காந்தா பிரியாணி/ நகைச்சுவை கதை

1 min read

Kanta biryani mixed with Kannayiram/ Story by Thabasukumar

30.6.2022
கண்ணாயிரம் காந்தாபிரியாணியை சுற்றுலா பஸ்சில் ஏலமிட்டார். இருநூற்றுஐம்பதில் தொடங்கிய ஏலம் ஐநூறில்வந்து நின்றது. சுடிதார் சுதாவுக்கு காந்தாபிரியாணியை கொடுக்கக்கூடாது என்று கண்ணாயிரம் நினைத்தார். ஆனால் விதிவிளையாடிய நிலையில் ஐநூறு ரூபாய்க்கு காந்தாபிரியாணியை சுடிதார்சுதாவிடம் கொடுத்துவிட்டு அவள் ரூபாய் தருவார் என்று கண்ணாயிரம் காத்திருந்தபோது ஜவுளிக்கடைக்காரருக்கு கொடுக்கவேண்டிய பத்தாயிரத்தில் கழித்து கொள்ளும்படி சுடிதார்சுதா சொல்ல நிலைகுலைந்த கண்ணாயிரம் கோபத்துடன் பார்த்த மனைவி பூங்கொடியை நோக்கிச்சென்றார். அவரை தன்பக்கத்தில் வரும்படி பூங்கொடி அழைத்ததால் கண்ணாயிரம் பயந்து பயந்து பூங்கொடிபக்கம் சென்று அமர்ந்தார்.
அவர் ஏலமுடிவை விலாவாரியாக கேட்டுவிட்டு கண்ணாயிரத்தை பார்த்து ஆ…உங்களமாதிரி யாராலும் ஏலம்விடமுடியாது…நூற்றம்பது ரூபாய்க்கு வாங்கிய பிரியாணியை ஐநூறு ரூபாய்க்கு ஏலம்விட்டியள…அபாரம்…அபாரம்.என்று பாராட்டினார்.
அதைகேட்டு கண்ணாயிரம் மகிழ்ச்சியில் சிரித்தபோது அந்த ஐநூறு ரூபாயை எங்கே என்று பூங்கொடி மெல்ல கேட்க கண்ணாயிரம் அது வந்து..அது வந்து என்று இழுக்க கண்ணாயிரத்தின் தொடையில் ஓங்கி கிள்ளினார் பூங்கொடி. இதை சற்றும் எதிர்ப்பார்க்காத கண்ணாயிரம் ஆ…என்று கத்த பஸ்சிலிருந்த எல்லோரும் திரும்பி பார்க்க கண்ணாயிரம்…ஒண்ணுமில்ல..ஒண்ணுமில்ல…சும்மா..சும்மா…என்று நெளிந்தார்.
அதைபார்த்த பயில்வான் சிரித்தபடியே கண்ணாயிரம்…என்பக்கத்திலேவந்து உட்காருங்க…பேசிக்கிட்டே போவோம் என்க கண்ணாயிரமும் இதுதான் சரியானவழி என்று எழுந்து பயில்வான் அருகில்போய் அமரந்துகொண்டார்.

பயில்வானிடம் அடுத்து நாம எந்த எந்த வழியாக போயி குற்றாலம் போகப்போறோம் என்று கண்ணாயிரம் கேட்க பயில்வானோ…ஏன் கண்ணாயிரம் தொடையில் கிள்ளினவலி குறைஞ்சிட்டா என்று கலாய்க்க…கண்ணாயிரம் அப்பாவியாக…அது எப்படி உங்களுக்கு தெரியும்..என்று பதட்டமாக கேட்டார்.
உடனே பயில்வான்…உன் சத்தத்தைவைத்துதான் கண்டுபிடிச்சேன்…தொடையில கிள்ளினா இப்படித்தான் சத்தம்போடுவாங்க…எனக்கும் அந்த அனுபவம் உண்டு என்று சிரிக்க கண்ணாயிரமும் அசடுவழிந்தார்.
சரி…சரி வீட்டுக்குவீடு அப்படித்தான் இருக்கும் போல என்று நினைத்த கண்ணாயிரம் பயில்வானிடம்…ம்..பஸ் போகின்ற பாதையை சொல்லுங்க என்று கேட்க பயில்வானும் சொல்லத்தொடங்கினார்..இந்தா பாருங்க…பாண்டிச்சேரியிலிருந்து கடலூர் வந்திட்டம்மா…அடுத்து கடலூரிலிலிருந்து நெல்லிக்குப்பம், பண்ருட்டி, நெய்வேலி விருத்தாசலம் வழியா திருச்சி போவோம். அங்கிருந்து மதுரை போயி நெல்லை வந்து ஆலங்குளம் தென்காசி வழியா குற்றாலம் போவோம் என்று சொல்ல கண்ணாயிரமோ..எந்த எந்த ஊரில எது பேமஸ்..சாப்பிடுற சமாச்சாரமா சொல்லுங்க என்க..பயில்வான்…ம்..பிரியாணி சாப்பிட்டதே செமிக்கல..அதுக்குள்ள சாப்பாடா..என்றபடி சொல்லத்தொடங்கினார்.
கண்ணாயிரம்..ஒவ்வொரு ஊரிலேயும் ஓண்ணு பேமஸ்…இதாபாரு..பண்டுருட்டியில பலாப்பழம்..பேமஸ்.தேன்மாதிரி இனிக்கும். அங்கே முந்திரியும் ரொம்ப பேமஸ்.பண்டுருட்டி முந்திரி சுவையோ தனி..சாப்பிட்டுக்கிட்டே இருக்கலாம் என்று ஆசைகாட்டினார்.
அதை கேட்ட கண்ணாயிரம் .பண்ருட்டி..பலாப்பழம் சாப்பிட்டே தீரணும்…பாண்டிச்சேரியிலும் பலாப்பழம் சாப்பிட்டிருக்கேன்..ஆனாலும் பண்டுருட்டி பலாப்பழத்தை பண்டுருட்டியிலே சாப்பிட்டாத்தானே..டேஸ்டு…என்னநான் சொல்லுறது என்ற கண்ணாயிரம் படக் என்று வயிற்றில் கைவைத்தார்.
என்ன கண்ணாயிரம் வயிற்றில்கைவைக்க என்று பயில்வான் கேட்க…கண்ணாயிரமோ…அது ஒண்ணூமில்ல…பிரியாணியை வயிறுமுட்ட நிறைய சாப்பிட்டுவிட்டேனா…பஸ் குலுக்கும்போது வயிறும் குலுங்குமில்யா..அப்போ கொஞ்சம் ..வலி மற்றபடி ஒண்ணுமில்ல…நீங்க சொல்லுங்க என்று கண்ணாயிரம் இழுக்க..பயில்வான் பேசினார்.
பஸ் வேகமாக குலுங்கி குலுங்கி சென்றது. பயில்வான் பேசப்பேச..கண்ணாயிரம்..ஆ..உம்..அப்படியா..ஆடடே..என்றபடி தலையை ஆட்டிக்கொண்டிருந்தார்.
பஸ் ஒருவளைவில் திரும்பியபோது கண்ணாயிரம் வயிற்றை வேகமாக பிடித்தபடி…ஏய்யா பஸ்சை மெதுவா ஓட்டுய்யா…நீ குலுக்குற குலுக்குல உள்ள உள்ளதெல்லாம் வெளியேவந்திடும்போல என்று புலம்ப..பயில்வான் மெல்ல..என்ன ஆச்சு..கண்ணாயிரம் வயிறு ஏதாவது கடமுடா பண்ணுதா சொல்லு என்று கேட்க…கண்ணாயிரம் வயிற்றை தடவியபடி…அந்த லெக்பீஸ் கொஞ்சம் வேகாமத்தான் இருந்துச்சு..வலுக்கு வலுக்குன்னு இருந்தது..நான்தான் காசு கொடுத்துவாங்கிட்டோமேன்னு லெக்பீசை முழுசா சாப்பிட்டுத்தொலைச்சேன்..அது இப்படி பண்ணுமுன்னு நினைக்கல…சர்வர் வேற நடிகை காந்தா சாப்பிட்ட பிரியாணின்னுவேற சொல்லிசத்தொலைச்சான்…அதனால பிரியாணியைவேற விடாமா சாப்பிட்டுப்புட்டேன்…இப்போ வலி பின்னி எடுக்கு என்று தலையை சொரிந்தவாறு சொல்ல…பயில்வானுக்கு பகீர் என்றது.
என்ன கண்ணாயிரம்…ஏதாவது ஆஸ்பத்திரிபார்த்து பஸ்சை நிறுத்தட்டுமா என்க..கண்ணாயிரமோ….ஆஸ்பத்திரிக்கு போகிற அளவுக்கு வலி இல்ல..டாய்லெட்டுக்கு போனா போதும்…பண்ருட்டி இன்னும் எவ்வளவு தூரம் என்று கேட்டார். பயில்வான் உடனே…இன்னும் பத்து நிமிடத்திலே…பண்ருட்டிவந்துடும்…பஸ்சை நிறுத்தச்சொல்லுறன்…போயிட்டுவாங்க என்று சொல்ல கண்ணாயிரம்…என்ன இன்னும் பத்து நிமிஷம் ஆகுமா…பஸ்சை வேகமா போகச்சொன்னாலும் சிக்கல்தான்..வயிறு தாங்காது…என்றவாறு கண்ணாயிரம் பற்களை கடித்தார்.
பூங்கொடிக்கிட்ட சொன்னா மறுபடியும் தொடையில் கிள்ளுவா…சத்தம்போடாம பண்டுருட்டியில் இறங்கி பாத்ரூம் போயிட்டு ஒரு சோடா அடிச்சிட்டா…எல்லாம் சரியாகிடும் என்றபடி வயிற்றை சமாதானப்படுத்தினார்.
ஆமா..பூங்கொடியும் காந்தாபிரியாணி சாப்பிட்டா..அவளுக்கு ஒண்ணும் செய்யல…நமக்குத்தான் வயத்தை குடையுது…என்ன விசியம்…ஒருவேளை காந்தாபிரியாணி பெண்களுக்கு ஒண்ணும் செய்யாது போலிருக்குது…என்னத்த சொல்ல…அடிச்சிபிடிச்சிசாப்பிட்டுப்புட்டு கஷ்டப்படுறது நாமத்தான்…ம்…சுடிதார் சுதாவும் சிக்கன் பிரியாணி சாப்பிட்டா..அவளுக்கு ஒண்ணும் செய்யலையே…எல்லாம் நமக்குத்தான் வந்துவிடியுது…அந்த லெக்பீசு வயித்துக்குள்ளே நடக்கிறமாதிரி இருக்குதப்பா என்று முணங்கியபடி இருந்தார்.
பயில்வான் அவரிடம் என்னப்பா …பண்டுருட்டிவரை தாங்குமா…எப்படி என்று கேட்க…கண்ணாயிரம் கண்களை உருட்டியபடி…தாங்கும்…தாங்கும்…பயில்வான்சார் அந்த டிரைவர் கொஞ்சம் முரடான ஆளு ..பண்டுருட்டியில் பஸ்சை நிறுத்தாம போயிடப்போறாரு….கொஞ்சம் அவருக்கிட்ட சொல்லிவையுங்க..இல்லன்னா பண்ருட்டியிலே நிக்காம போயிருவாரு…பிறகு எனக்கு நிக்காம போயிரும்…உஷாராபோய் சொல்லுங்க என்று சொல்ல பயில்வானும் எழுந்துபோய் டிரைவரிடம் பண்டுருட்டியில பஸ்சை நிறுத்தும்படி கூற டிரைவரோ எத்தனை இடத்திலே பஸ்சை நிறுத்திறது என்று எகிர…பயில்வான் கெஞ்சினார்.
நிலமை மோசமாவதை அறிந்த கண்ணாயிரம் எழுந்து தள்ளாடியபடி டிரைவர் பக்கம்வர…பஸ்சுக்குள் ஏதாவது ஆயிடக்கூடாது என்று நினைத்த டிரைவர் பண்ருட்டி பஸ்நிலையம் அருகே பஸ்சை நிறுத்தினார்.
அவ்வளவுதான் கண்ணாயிரம் பஸ் கதவை திறந்துகொண்டு பஸ்நிலையத்துக்குள் ஓடினார். எங்கே பாத்ரூம் இருக்கு என்று தெரியாமல் சுற்றிசுற்றிவர ..மூச்சுவாங்கியபடி.. எதிரே வந்தவரிடம் பாத்ரூம் எங்கே என்று கேட்க அவர் ஓரிடத்தை காட்ட கண்ணாயிரம் புயல்வேகத்தில் அங்கு ஓடினார். ஆனால் அந்த பாத்ரூம் அந்த நேரத்தில் அவுஸ்புல்…கண்ணாயிரம் விழிபிதுங்கியது.(தொடரும்)

-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.