August 21, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி

1 min read

Southern District Level Shooting Competition

19.5.2025
தென்காசி மாவட்டம் மேலமெஞ்ஞானபுரம் பகுதியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தென்காசி எஸ் பி அரவிந்த் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

தென் மாவட்டங்களுக்கு இடையேயான ஃபிரண்ட்லி இன்டர் டிஸ்ட்ரிக்ட் ஷூட்டிங் காம்படிஷன், தென்காசி டிஸ்ட்ரிக்ட் ரைபிள் கிளப்பில் வைத்து இரண்டு நாட்கள் சிறப்பாக நடைபெற்றது. போட்டியின் இறுதி நாளான இன்று வெற்றி பெற்ற வீரர்களுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். அரவிந்த் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

இந்தப் போட்டியில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராஜபாளையம் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 200 துப்பாக்கிடும் வீரர்கள், வீராங்கனைகள் பங்கு பெற்றனர். முன்னதாக இப்போட்டியை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் சிறப்பாக துவங்கி வைத்தார். துணை காவல் துறை கண்காணிப்பாளர் பாஸ்கர் பாபு கலந்து கொண்டார்.

தமிழ்நாடு சூட்டிங் அசோசியேஷன் செகரட்டரி வேல்சங்கர் விழாவிற்கு முன்னிலை வகித்தார். தென்காசி டிஸ்ட்ரிக்ட் ரைபிள் கிளப்பின் செகரட்டரி ரஷீத் நன்றியுரை ஆற்றினார். போட்டியின் நடுவர் குழுவான நவநீத கிருஷ்ணன், ஷாஜி மற்றும் சமீமா பர்வீன் ஆகியோர் போட்டியினை சிறப்பாக நடத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தென்காசி டிஸ்ட்ரிக்ட் கிளப்பின் விழா ஒருங்கிணைப்பாளர் குழு சக்தி மணிகண்டன், ரிஸ்வி மற்றும் விஷ்ணு தேவி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *