June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

பல் டாக்டரிடம் செக் மோசடி-தென்காசி வழக்கறிஞருக்கு 2 ஆண்டு சிறை

1 min read

Tenkasi lawyer gets 2 years in prison for cheating dentist on cheque

5.11.2026
தென்காசி மாவட்டம் தென்காசியில் டாக்டரிடம் செக் மோசடி செய்த வழக்கில் தென்காசி வழக்கறிஞருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10 லட்சம் இழப்பீடு வழங்க மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தென்காசியை சேர்ந்த பல் மருத்துவர் சிதம்பரம். அதே பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் முகம்மது இஸ்மாயில் நடத்திய ஏலச்சீட்டில் கடந்த 2011 முதல் 2013 வரை ரூபாய் .10.50 லட்சம் வரை முதலீடு செய்துள்ளார். ஏலச்சீட்டு முதிர்வடைந்த நிலையில் அவருக்கு வழங்க வேண்டிய பணத்தை கொடுக்கவில்லை.

இதனால் பல் மருத்துவர் சிதம்பரம் தென்காசி போலீசில் புகார் அளித்த நிலையில் ரூ.2 லட்சம் மட்டும் கொடுத்துள்ளார்.
மீதமுள்ள தொகைக்கு வங்கி காசோலை கொடுத்துள்ளார். இந்த காசோலை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பியது. இதனால் மருத்துவர் சிதம்பரம், செங்கோட்டை மாஜிஸ் திரேட் நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கில் செங்கோட்டை கீழமை நீதிமன்றம், முகமது இஸ்மா யிலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை, மற்றும் ரூபாய்.20 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டு மென உத்தரவிட்டது.

இந்த வழக்கில் செங்கோட்டை நீதிமன்ற உத்தரவை நெல்லை முதன்மை அமர்வு நீதிமன்றம் உறுதி செய்தது. இதை எதிர்த்து முகம்மது இஸ்மாயில் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எல்.விக்டோரியா கவுரி, செக் மோசடி நடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே கீழமை நீதிமன்றம் விதித்த தீர்ப்பை ரத்து செய்ய முடியாது. சிறை தண்டனை வழங்கிய உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. அதே நேரம் ரூ.20 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டு மென்பது ரூ.10 லட்சமாக குறைக்கப்படுகிறது. இதை 3 மாதத்திற்குள் வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *