June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையம் பெரும்பத்து ஊராட்சி தலைவருக்கு விருது

1 min read

Award to Kadayam Perumpathu Panchayat President

18.2.2026
கடையம் பெரும்பத்து ஊராட்சி மன்ற தலைவர் பொன்ஷீலா பரமசிவனுக்கு சிறந்த ஊராட்சி மன்ற தலைவருக்கான விருதை நடப்பு தராசு இதழ் வழங்கியது.

இந்த விருது வழங்கும் விழாவில் தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கடையம் பெரும்பத்து ஊராட்சி மன்ற தலைவர் பொன்ஷீலா பரமசிவனுக்கு சிறந்த ஊராட்சி மன்ற தலைவர் விருது 2026 கிராம சேவை ரத்னா விருது வழங்கப்பட்டது.
இவரது சமூகநலப் பணிகள், நிர்வாகத் திறன், பொதுமக்களுடனான அணுகுமுறை போன்ற செயல்பாடுகள் மீதான கடையம் பெரும்பத்து ஊராட்சியை சேர்ந்த மக்களிடம் எடுக்கப்பட்ட கருத்து கணிப்பின் அடிப்படையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது என விருது வழங்கிய நடப்பு தராசு இதழ் தெரிவித்துள்ளது.

சிறந்த ஊராட்சி மன்ற தலைவருக்கான விருதை பெற்றுக் கொண்ட பொன்ஷீலா பரமசிவன் கூறுகையில், இந்த விருது தன்னை மக்கள் பணி மற்றும் சமூகநலப் பணிகளில் இன்னும் அதிக ஆர்வத்துடன் செயல்பட ஊக்கப்படுத்தியுள்ளது என தெரிவித்தார். மேலும், தொழிலதிபரும் சமூகநல ஆர்வலருமான தனது கணவர் பரமசிவனின் ஊக்கப்படுத்துதலே தனது வெற்றிக்கு காரணமென்றும் தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *