சேரன்மகாதேவி வனப்பகுதியில் குப்பை மேடுகளால் வனவிலங்குகளுக்கு ஆபத்து
1 min read
Garbage dumps in Cheran Mahadevi forest area pose a threat to wildlife
18.2.2026
திருநெல்வேலி மாவட்டம்,
சேரன்மகாதேவியி வனப்பகுதியில் குப்பை மேடாக மாறிய காடு; மிளா மற்றும் மாடுகள் பிளாஸ்டிக் கழிவுகளை தின்னும் அவலம் குறித்த வீடியோ வைரல்
நெல்லை மாவட்டத்தின் பாபநாசம் மற்றும் களக்காடு வனப்பகுதிகளில் வனத்துறை அதிகாரிகள் கடுமையான சோதனைகளை நடத்துகின்றனர். அங்கு உள்ளே செல்லும் நபர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். இந்நிலையி, சேரன்மகாதேவி அருகே காட்டுப்பகுதியில் மலைபோல் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. காட்டில் சுற்றி திரியும் மாடுகளும் மிளாக்களும் இந்தக் குப்பைகளை உணவாகத் தின்னும் அவலநிலை நிலவுகிறது.
இந்த பிரச்சினை குறித்து ஏற்கனவே பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை என இந்திய சட்ட உரிமை மற்றும் ஊழல் தடுப்பு அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. அதிகாரிகளிடம் கேட்டபோது, உள்ளாட்சி அமைப்புகள் தான் குப்பையை கொட்டுவதாக கூறுகின்றனர்.
இதற்கிடையில் நெல்லையைச் சேர்ந்த விலங்கு நல ஆர்வலர்கள் மிளா குப்பையை தின்னும் வீடியோவை பகிர்ந்து தங்கள் கவலையைத் தெரிவித்து வருகின்றனர். வனத்துறை உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு குப்பைகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.