7.5% இட ஒதுக்கீடுக்கு திமுக உரிமை கொண்டாடுவதா?-சட்டசபையில் இபிஎஸ் ஆவேசம்
1 min read
Is DMK claiming the right to 7.5% reservation? – EPS’s anger in the Assembly
18.2.2026
மருத்துவ படிப்பில் 7.5 % இடஒதுக்கீட்டை திமுக தான் வலியுறுத்தியது என்ற அமைச்சர் சுப்பிரமணியனின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் அதிமுக எம்எல்ஏக்கள் கடும் அமளி ஈடுபட்டனர்.
சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும் போது, ”கவர்னர் மாளிகைக்கு முன்பாக எதிர்க்கட்சியாக இருந்த திமுக நடத்திய போராட்டத்தால்தான் 7.5% இட ஒதுக்கீடு சட்டமானது” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதற்கு இபிஎஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறியதாவது: மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டை திமுக தான் வலியுறுத்தியது என்பது தவறான பேச்சு; உண்மைக்கு புறம்பான தகவல்கள் பேசப்படுகின்றன என்றார்.
இதையடுத்து, ”அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேர 7.5% இட ஒதுக்கீட்டை கொண்டுவந்தவர் இபிஎஸ்” என கே.பி.முனுசாமி தெரிவித்தார். அமைச்சர் மா.சுப்பிரமணியனின் பேச்சை கண்டித்து அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர். சட்டசபையில் காரசாரமான விவாதம் நடந்தது.
யார் ஆட்சியில் வளர்ச்சி என சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு- இபிஎஸ் இடையே விவாதம் நடந்தது.
தங்கம் தென்னரசு; அதிமுக ஆட்சியில் ஒற்றை இலக்க வளர்ச்சி தான் அடைந்தோம். தற்போது திமுக ஆட்சியில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது.
இபிஎஸ்: திமுக ஆட்சியில் மட்டுமே உற்பத்தி அதிகம் என்று கூறுவது தவறு. செய்த சாதனையை மக்களிடம் சொன்னோம். விளம்பரம் செய்யவில்லை.
விளம்பரம் தேடும் செயலில் மட்டும் தமிழக அரசு ஈடுபடுகிறது. நாங்கள் செய்ததை கூட சொல்லி விளம்பரம் தேடிக்கொண்டது இல்லை.
திமுக, அதிமுக ஆட்சியை சேர்த்து தான் 11.19 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது,
இவ்வாறு கூறுகிறார்.