August 25, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் மதநல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி- ஆட்சியர் பங்கேற்பு

1 min read

Iftar program for religious harmony in Tenkasi – Collector participates

4.3.2026
தென்காசி மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கம் சார்பில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி தென்காசி சௌந்தர்யா ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், மகளிர் திட்ட இயக்குனர் அபிதா ஹனீப், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தனர். சங்க இணை செயலாளரும், மீரான் மருத்துவமனை நிர்வாக இயக்குனருமான டாக்டர் அப்துல் அஜீஸ் வரவேற்றார்.

பஜார் பள்ளிவாசல் இமாம் அப்துல் ஜப்பார் ஆலிம் கிராஅத் ஓதினார். சங்க காப்புரிமை உறுப்பினர் டாக்டர் அமீர்கான் தொகுத்து வழங்கினார். சங்க செயலாளர் ரவணசமுத்திரம் முகமது சலீம் விளக்க உரையாற்றினார். பட்டிமன்ற பேச்சாளர் ராமச்சந்திரன், தலைமை மத போதகர் ராஜன், வடகரை பேரூராட்சி மன்ற தலைவர் ஷேக்தாவூது, மாவட்ட ஐக்கிய ஜமாத் தலைவர் விடிஎஸ்ஆர் முகமது இஸ்மாயில், மாவட்ட பொருளாளர் கடையநல்லூர் எம். செய்யது இப்ராஹிம் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பேசினார்கள். கௌரவ உறுப்பினர் முகைதீன் நன்றி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் செயலாளர் பக்கீர் மைதீன், உறுப்பினர் அலி ஷேக் மன்சூர், கவுரவ உறுப்பினர் காசிம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் எம்.அப்துல் அஜீஸ், மாநில விவசாய அணி செயலாளர் முகமது அலி, வர்த்தக அணி மாவட்ட தலைவர் ஹெச். அகமது மீரான் காங்கிரஸ் பைசல்சாகுல் ஹமீது, தாதா பீர், ஹாஜி முஸ்தபா குரூப்ஸ் எஸ்.எம்.கமால் முஹைதீன், எஸ்.எம்.செய்யது சுலைமான், எஸ்.எம்.அசன் கனி, விவசாய சங்கம் டேனி அருள்சிங், தொழிலதிபர்கள் ராஜகோபாலன், அழகராஜா, இலஞ்சி பாரத் கல்விக் குழும தலைவர் மோகனகிருஷ்ணன், மூத்த பத்திரக்கையாளர் புளியங்குடி சாகுல் கமீது, மடத்துப்பட்டி வீ.ஏ.எஸ்.அப்துல் குத்தூஸ் ரவணசமுத்திரம் புகாரி மீரா சாகிப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *