August 21, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையம்- புகையிலை பொருட்கள் பதுக்கிய 2 பேர் கைது

1 min read


Two arrested for hoarding tobacco products at Kadayam

15.5.2026
கடையத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி மாவட்டம் கடையத்தை அடுத்த ஆசிர்வாதபுரத்தை சேர்ந்த செல்வகுமார் (த /பெ தாவீது), ஆவுடையானூரை அடுத்த லட்சுமிபட்டியை சேர்ந்த செல்வன் (த /பெ பழனிச்சாமி) ஆகிய இருவரும் கூட்டாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வது குறித்து கடையம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கடையம் காவல் சரக ஆய்வாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் துணை ஆய்வாளர் டேவிட் ஸ்டீபன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

சோதனையின்போது விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த அரசால் தடை செய்யப்பட்ட 21 பெரிய புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து புகையிலையை விற்பனைக்காக
பதுக்கி வைத்திருந்த செல்வகுமார் மற்றும் செல்வன் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-ஜோசப், நிருபர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *