July 10, 2026

Seithi Saral

Tamil News Channel

குற்றாலம் அருவிப் பகுதியில் நடைபெறும் பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக் கோரிக்கை

1 min read

Urgent completion of maintenance work at Courtallam waterfall area

22.5.2026
குற்றாலத்தில் விரைவில் சீசன் தொடங்க உள்ள நிலையில், அருவி பகுதிகளில் நடைபெறும் பராமரிப்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் – என்று திருக்குற்றாலநாதர் கோவில் வியாபாரிகள் சங்கத்தினர் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள மெயினருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி என அனைத்து அருவிகளிலும் ஜூன் ஜூலை ஆகஸ்ட் ஆகிய மூன்று மாத காலங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இந்த காலங்களில் குளிப்பதற்கு தமிழகம் மட்டுமின்றி வேறு வெளி மாநிலங்களில் வெளிநாடுகளில் இருந்தோம் கணக்கான சுற்றுலா பணிகள் குற்றாலத்திற்கு வருகை தருவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டு விரைவில் குற்றால சீசன் தொடங்க உள்ள நிலையில் அவ்வப்போது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மிதமான சாரல் மழை பெய்து வருகிறது இந்நிலையில் பிரதான அருவியான மெயினருவி மற்றும் பழைய குற்றால அருவி பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழைய குற்றாலப் அருவி பகுதியில் அங்கு குளிப்பதற்கு நபர் ஒன்றுக்கு ரூபாய் இருபது என்று கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இன்று திருக்குற்றால நாத கோவில் வாடகைதாரர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர் தென்காசி மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள்.

அந்த மனுவில் குற்றாலம் பேரருவியில் நடைபெறும் புதிய பாதுகாப்பு வளையம் மற்றும் சீரமைப்பு வேலைகளை துரிதப்படுத்த வேண்டும், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயத்தில், பெருமளவு வெள்ளம் குறைந்த பிறகு அருவியின் ஓரமாக 10 முதல் 15 நபர்கள் வரை காவல் பாதுகாப்புடன் பொதுமக்கள் அருவியில் குளித்து செல்ல அனுமதி அளிக்க வேண்டும்,

பழைய குற்றாலம் அருவியில் குளிப்பதற்கு நபர் ஒருவருக்கு 20 ரூபாய் கட்டணம் என்று வனத்துறையினர் நிர்ணயம் செய்திருப்பதை ரத்து செய்ய வேண்டும். மேலும் பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே குளிக்கலாம் என்ற காலநேரத்தை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பொதுமக்கள் குளிக்க வனத்துறை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் குற்றாலம் வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் செயலாளர் அம்பலவாணன் பொருளாளர் முருகன் மற்றும் ராஜ்மெஸ் வேல்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *