June 23, 2026

Seithi Saral

Tamil News Channel

சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் பரபரப்பு பேச்சு

1 min read

Chief Minister Vijay delivers a sensational speech in the Legislative Assembly.

23.6.2026
போதை கலாசாரத்தை தடுக்க தெரிந்த அளவிற்கு போதை கலாசாரத்தை வளர்க்க தெரியாது என முதல்-அமைச்சர் விஜய் கூறினார்.

சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் விஜய் பேசினார். அப்போது தவெக அரசுக்கு என்ன தெரியும், தெரியாது என்பதை பட்டியலிட்டு அவர் பேசியதாவது;

நமக்கு ஆட்சி செய்ய தெரியாது; நமது அமைச்சர்களுக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஒன்றும் தெரியாது என்று சொல்கிறார்கள்..

  • கோயில்களில் நடக்கிற நிர்வாக சீர்கேட்டை தடுக்கத் தெரியுமே தவிர கோயில் பணத்தை கொள்ளையடிக்க தெரியாதுதான்.
  • தங்கத்தை உருக்கி தாரை வார்க்கத் தெரியாதுதான்.
  • ஆம், எங்களுக்கு தெரியாதுதான்… மக்கள் பணி செய்யத் தெரிந்த அளவுக்கு மக்கள் பணத்தை சுருட்டத் தெரியாதுதான்.
  • கனிமவளத்தை பாதுகாக்க தெரிந்த அளவிற்கு கனிமத்தை விற்று கொள்ளையடிக்க தெரியாதுதான்.
  • டெண்டர்களை முறைப்படுத்த தெரிந்த அளவிற்கு அதோட விலையை உயர்த்தி ஊழல் செய்ய தெரியாதுதான்.
  • அரசு வருமானத்தை அரசு கஜானாவிற்கு மாற்ற தெரிந்த அளவிற்கு அந்தப் பணத்தை தனிப்பட்ட கஜானாவிற்கு மடைமாற்றம் செய்ய தெரியாதுதான்.
  • பணி உயர்வு வழங்கவும் பணியிட மாற்ற கலந்தாய்வு நடத்தவும் தெரியுமே தவிர பணி உயர்வுக்கும் பணியிட மாற்றத்திற்கும் பணம் பறிக்க தெரியாதுதான்.
  • புதிய பணியிடங்களை உருவாக்கத் தெரியுமே தவிர பணியிடங்களை பணத்திற்கு விற்கத் தெரியாதுதான்.
  • போதை கலாசாரத்தை தடுக்க தெரிந்த அளவிற்கு போதை கலாசாரத்தை வளர்க்க தெரியாதுதான்.
  • நமது குடும்பத்தில் உள்ள பாட்டி, அம்மா, அக்கா, தங்கச்சி, பெண்களை மதிக்கத் தெரிந்தவர்களுக்கு “ஓசி பஸ்சு, 1000 ரூபாய் கேசு” அப்படி எல்லாம் பேச தெரியாதுதான்.
  • எங்கள் உறுப்பினர்களுக்கும், அமைச்சர்களுக்கும் மக்கள் சேவை தெரிந்த அளவிற்கு சுயநல தேவையை செய்துகொள்ள தெரியாதுதான்.”

இவ்வாறு அவர் பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *