September 22, 2026

Seithi Saral

Tamil News Channel

இராஜபாளையம்- செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலைநில ஆவணங்கள் பெறும் சிறப்பு முகாம்.

1 min read

Rajapalayam–Sengottai National Highway Special camp for obtaining land documents.

20.9.2026
இராஜபாளையம் – செங்கோட்டை வரை தேசிய நெடுஞ்சாலை -744 அமைக்கும் பணிக்காக
கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்குரிய நில உடைமைதாரர்களிடமிருந்து நில ஆவணங்களை பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங்,
வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தென்காசி மாவட்டம் இராஜபாளையம் – செங்கோட்டை வரை தேசிய நெடுஞ்சாலை -744அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்குரிய நில உடைமைதாரர்களிடமிருந்து ஆவணங்களை பெற்று கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கும் பொருட்டு நில உடைமைதாரர்களி டமிருந்து நில ஆவணங்களை பெறுவதற்கான சிறப்பு முகாம் அந்தந்த கிராம நிர்வாக அலுவலகங்களில் பின்வருமாறு நடத்தப்பட உள்ளது.

சிவகிரி வட்டம், 22.09.2026 செவ்வாய் கிழமை, சிவகிரி பாகம்-1 கிராமம், 24.09.2026, வியாழக் கிழமை இராயகிரி பாகம் 2 கிராமம், 25.09.2026 வெள்ளி கிழமை திருமலாபுரம் கிராமம். 30.09.2026 புதன் கிழமை நாரணபுரம் பாகம்-2 கிராமம், 01.10.2026 வியாழக் கிழமை வாசுதேவநல்லூர் கிராமம்.

செங்கோட்டை வட்டம், 01.10.2026 வியாழக் கிழமை வடகரை கீழ்பிடாகை கிராமம், 05.10.2026 திங்கள் கிழமை பண்பொழி கிராமம், 06.10.2026 செவ்வாய் கிழமை புதூர் கிராமம்.

கடையநல்லூர் வட்டம். 22.09.2026 செவ்வாய் கிழமை திருமலை நாயக்கன் புதுக்குடி கிராமம், 24.09.2026 வியாழக் கிழமை மடத்துப்பட்டி கிராமம், 25.09.2026 வெள்ளி கிழமை சிந்தாமணி கிராமம், 30.09.2026 புதன் கிழமை கடையநல்லூர் கிராமம்.

தேசிய நெடுஞ்சாலை 744 அமைக்கும் பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான உரிமை குறித்த ஆவணங்களை இதுவரை சமர்ப்பிக்காத நில உடைமைதாரர்கள் இம்முகாம்களில் கலந்து கொண்டு ஆவணங்களை சமர்ப்பித்து பயன்பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *