ஆய்க்குடி அமர் சேவா: உலக மன நல தினம் விழிப்புணர்வு பேரணி
1 min read
Aykudi Amar Seva: World Mental Health Day Awareness Rally
12/10/2026
ஆய்க்குடி அமர் சேவா சங்கத்தின் சார்பில் தென்காசி மாவட்டம் சுரண்டையில் உலக மன நல தினம் விழிப்புணர்வு பேரணியோடு சிறப்பாக கொண்டாடப்பட்டது இவ்விழாவில் அமர் சேவா சங்கத்தின் கிராமம் சார்ந்த மறுவாழ்வு பணி ஒருங்கிணைப்பாளர் நவமணி அவர்களின் வரவேற்புரையோடு நிகழ்ச்சி தொடங்கியது. தென்காசி மாவட்ட மாவட்ட சுகாதார மற்றும் மருத்துவத் துறையின் இணை இயக்குனர் திருமதி பிரேமலதா அவர்களும், தென்காசி தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்ட்லின் ஆர்த்தோ அவர்களும், தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனை மனநல மருத்துவர் நிர்மல் அவர்களும், மனநல மருத்துவர் இப்ராஹிம் அவர்களும், சுரண்டை நகர்மன்ற தலைவர் திரு வள்ளி முருகன் அவர்களும் தமிழக வெற்றிக் கழகத்தின் தென்காசி மேற்கு மாவட்ட செயலாளர் திரு நியாஸ் அவர்களும் சுரண்டை நகர செயலாளர் திரு கணேசன் அவர்களும் இந்த நாடார் உறவின்முறை கமிட்டி தலைவர் திரு சௌந்தர் அவர்களும் கலந்து கொண்டு மனநலம் பற்றியும் அமர்சேவா சங்கத்தின் சிறப்பான செயல்பாடுகள் பற்றியும் அழகாக எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார் மேலும் அமர்சேவா சங்கத்தின் தலைவர் பத்மஸ்ரீ விருது பெற்றவர் திரு எஸ் ராமகிருஷ்ணன் அவர்களும் செயலாளர் திரு சங்கரராமன் அவர்களும் கமிட்டி உறுப்பினர் திருமதி பட்டம்மாள் அவர்களும் திரு ராஜேஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டு மனநலம் பற்றிய முக்கியத்துவத்தை எடுத்துரைத்து வாழ்த்துரை வழங்கினர். இந்த விழிப்புணர்வு பேரணியில் வெற்றி கரங்கள் மாற்றுத்திறனாளிகள் சுய உதவி குழு மற்றும் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தமிழக வெற்றி கழகத்தின் அன்பர்கள் இந்து நாடார் உறவின்முறை கமிட்டி பொறுப்பாளர்கள் அமர்சேவா சங்கப் பணியாளர்கள் மேலும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியினை கிராமம் சார்ந்த மறுவாழ்வு ஒருங்கிணைப்பாளர் இசக்கிமுத்து அவர்கள் நன்றி கூறி நிறைவு செய்தார்.
இந்த நிகழ்ச்சிகளை சங்கத்தின் கிராமம் சார்ந்த மறுவாழ்வு பணியாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்