October 12, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையநல்லூரில் பாம்பு கடித்து வியபாரி இறந்ததற்கு செவியர்கள் அலட்சியம் காரணமா?- விளக்கம் கேட்பு

1 min read

Was negligence by hospital staff the cause of a merchant’s death following a snakebite in Kadayanallur? — Explanation sought

12.10.2026
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் பாம்பு கடித்து முறுக்கு வியாபாரி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து மருத்துவ அலுவலர் டாக்டர் அனிதாபாலின் மெமோ கொடுக்கப்பட்டுள்ள இரண்டு செவிலியர்களிடமும் விசாரணை நடத்தினார்
கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம் பருத்தி விளை வடக்கு தெருவை சேர்ந்தவர் சிந்தாமணி என்பவரது மகன் சுடர்மனி (வயது 66) முறுக்கு வியாபாரி கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை வீட்டின் பின்புறம் உள்ள கழிவறை பகுதிக்கு சென்ற பொழுது பாம்பு கடித்ததால். அவரது குடும்பத்தினர் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்த நிலையில் இரவு நேர டாக்டர் பணியில் இல்லை எனவும் செவிலியர்கள் அஜாக்கிரதையாக இதையும் கண்டு கொள்ளாமல் அலட்சியம் காட்டியதால் அவர் உயிரிழந்தாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் அவரது உறவினர்கள் புகார் தெரிவித்து‌ மருத்துவமனை யில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்டம் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பிரேமலதா மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு இது தொடர்பாக இரண்டு செவிலியர்களுக்கு விளக்கம் கேட்டு மெமோ அளித்தார்.
இந்நிலையில் சுடர்மணி இறந்ததற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் காளிராஜ் மூலம் விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் இன்று மருத்துவமனையை பார்வையிட்டு சம்பவம் குறித்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் விளக்கம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது :-

இனி மேல் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் மருத்துவர்கள் பணியாற்ற வேண்டும் எனவும் இரவு பணி மருத்துவர் பணியில் இல்லாதது குறித்தும் செவிலியர்களின் அலட்சியப் போக்கு குறித்தும் துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மேலும் புற நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சிகிச்சை பெற வரும் புற நோயாளிகள் வெகு நேரம் காத்திருக்க வேண்டிய உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் புற நோயாளிகள் வெகுநேரம் காத்திருக்காத வகையில் விரைவாக சிகிச்சை பெறுவதற்கான வசதிகளை அதிகரிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாகவும்
மருத்துவமனைக்கு தேவையான கட்டிட வசதி மற்றும் மருத்துவ உபகரணங்கள் தேவைகள் குறித்து கேட்டறிந்து உள்ளதாகவும் மருத்துவமனையை போதிய வசதியுடன் நான்கு மாடி கட்டிடமாக உயர்த்துவது தொடர்பான கோப்புகள் தேக்க நிலையில் இருப்பதாக குறித்து மத்திய சுகாதார துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என்றும் தெரிவித்தார்.

தென்காசி எம்பி டாக்டர் ராணி ஸ்ரீகுமார்மருத்துவமனை ஆய்வின் போது நாடாளுமன்ற உறுப்பினரோடு கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் மருத்துவ அலுவலர் அனிதா பாலின், ஆகியோர் உடன் இருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *