இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்து – அமெரிக்க வெளியுறவு மந்திரி பேட்டி
1 min read
Trade agreement with India to be signed soon – US Secretary of State
20.10.2026
இந்தியா, அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்றும், வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்றும் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
மத்திய ஆசியாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க-இந்திய வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் தருவாயில் உள்ளது. இந்த சூழலில், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோ இன்று இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார்.
இந்தியாவில் மார்கோ ரூபியோ 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முன்னதக இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மார்கோ ரூபியோ இன்று பிற்பகல் மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைவார். மும்பையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் மார்கோ ரூபியோ கலந்து கொள்கிறார். தொடர்ந்து மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து, இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்று அமெரிக்க வெளியுறவு மந்திரி மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மும்பையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “இந்தியா, அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும். வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் நல்ல செய்தி வெளியாகும். இந்தியாவிற்கு இன்னும் பலமுறை வர வேண்டும். உலகிலேயே அதிக மக்கள் தொகையும் மிகப்பெரிய ஜனநாயகமும் கொண்ட நாடு இந்தியா. அமெரிக்காவின் முக்கிய வணிக, பாதுகாப்பு பங்காளியாக இந்தியா திகழ்கிறது” என்று கூறினார்.