April 30, 2024

Seithi Saral

Tamil News Channel

மாஸ்டர் படத்தை வெளியீட ரசிகர்கள் கடும் எதிர்ப்பு

1 min read

Fans strongly oppose the release of the master

28/11/2020

மாஸ்டர் படத்தை வெளியிடுவது தொடர்பாக ரசிகர்கள் திடீர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

விஜய் நடிக்கும் மாஸ்டர்

நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படம் முழுமை அடைந்து வெளியிட தயாராக உள்ளது. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார்.

இந்தப் படம் தீபாவளி விருந்தாக வெளிவர இருந்தது. கொரோனா தொற்று காரணமாக தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததால், ‘மாஸ்டர்’ படம் வெளியாகவில்லை. சமீபத்தில் தியேட்டர்கள் அனைத்தையும் திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து, ‘மாஸ்டர்’ படம் பொங்கல் விருந்தாக தியேட்டர்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

ரசிகர்கள் எதிர்ப்பு

இந்த நிலையில், மாஸ்டர் படத்தை வருகிற பொங்கல் அன்று ஓ.டி.டி.யில் திரையிடுவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை ‘நெட்பிளிக்ஸ்’ என்ற ஓ.டி.டி. இணையதள நிறுவனம் வெளியிடுகிறது என்றும் செய்திகள் வெளியானது.

இதை அறிந்த ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாஸ்டர் படத்தை தியேட்டரில் தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று படக்குழுவினருக்கு கோரிக்கை வைத்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.