May 14, 2024

Seithi Saral

Tamil News Channel

திருமணம் கைகூட நடிகர் சிம்பு சிறப்பு வழிபாடு

1 min read

Actor Simbu special worship at the wedding hand

20.2.2021

நடிகர் சிம்பு தனக்கு திருமணம் கைகூட சிறப்பு வழிபாடு நடத்தினார்.

நடிகர் சிம்பு

சிம்பு நடித்த ஈஸ்வரன் படம் கடந்த பொங்கல் அன்று வெளியானது. சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான இந்தப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் மாநாடு படத்தில் சிம்பு நடித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து அடுத்ததாக பத்து தல படத்திலும், இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்திலும் நடிக்க சிம்பு ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

சிறப்பு வழிபாடு

இந்த நிலையில் சிம்பு திடீரென உத்திரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு சென்றுள்ளார். அங்கு பிரசித்திப் பெற்ற கங்கை ஆற்றில் தீபம் ஏற்றி வழிபட்டுள்ளார்.
அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கங்கையாற்றில் தீபம் வழிபாடு செய்தது திருமணத்திற்கான பரிகாரம் என்று கூறப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.