May 14, 2024

Seithi Saral

Tamil News Channel

“வேட்டை நாய்” சினிமா 26ந் தேதி வெளியீடு

1 min read

“Vwwtai Naiy” cinema release on the 26th

21/2/2021
நடிகர்கள் ஆர்.கே.சுரேஷ், ராம்கி, சுபிஷா நடித்த வேட்டை நாய் படம் 26ந் தேதி வெளியாகிறது.

வேட்டை நாய்

சுரபி பிக்சர்ஸ் வழங்கு தாய் மூவீஸ் “வேட்டைநாய்” என்ற பெயரில் புதிய படத்தை தயாரித்து உள்ளது. இந்தப் படத்தை சுரபி. ஜோதிமுருகன் தயாரித்துள்ளார். இணைத் தயாரிப்பாளர் விஜய் கார்த்திக். பாடல்களை அனிருத் எழுதியுள்ளார். இசை கணேஷ் சந்திரசேகர்.
இந்ப் படத்தில் ஆர்.கே.சுரேஷ், ராம்கி, நடிகை சுபிஷா மற்றும் நமோ நாராயணன், ரமா, கவுதம் கிருஷ்ணா, சோனா நாயர் உள்பட பலர் நடித்துள்ளனர்.
கதை திரைக்கதை வசனம் டைரக்ஷன் எஸ். ஜெய் சங்கர். இப்படத்தில் டெக்னீசன்களாக முனீஸ் எம்.ஈஸ்வரன், கணேஷ் சந்திரசேகரன், விஜய் கிருஷ்ணன், திலிப் சுப்புராயன், எஸ்.எஸ்.சசி தேவராஜ், சரவணன் செல்வராஜ், இளவரசன், கலைமாறன், சரணிபதி, சேது, நந்தா, நடனம் காதல் கந்தாஸ், பி.ஆர்.ஒ. சக்தி சரவணன் ஆகியோர் பணியாற்றி உள்ளனர்.

26ந் தேதி

இந்த படம் வருகிற 26ந் தேதி(வெள்ளிக்கிழமை) உலகம் எங்கும் வெளியாகிறது.
தென்மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுக்கு காளைகளை வளர்ப்பார்கள். அதேபோல் வீடுக்கு ஒரு வேட்டை நாய் வளர்ப்பார்கள். நாய் காலபைரவரின் வாகனமாக விளங்குகிறது. நாய் நன்றியுள்ள பிராணி. இதேபோல் இந்தப் படத்தின் கதாநாயகன் தன் தலைவனுக்கு வேட்டை நாய் போல் நன்றியுடனும் பாய்ந்து தாக்கும் தன்மையுடனும் விளங்குகிறான். அந்த வகையில் இந்த வேட்டை நாய்(படம்) வெற்றி படமாக அமையும் என்கிறார்கள்.
இந்தப் படம் தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் வெளிவர உதவி மதுரை லோகு மிகவும் உதவிகரமாக இருந்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.