May 14, 2024

Seithi Saral

Tamil News Channel

கொரோனாவில் இருந்து மீண்டார் சூர்யா

1 min read

Surya recovered from the corona

23.2.2021

நடிகர் சூர்யா தற்போது கொரோனாவில் இருந்து மீண்டார்.

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யாவுக்கு சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் வீட்டுக்கு சென்று தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சையை தொடர்ந்தார்.

அவர் நடிக்க ஒப்பந்தமான புதிய படத்தின் பூஜை கடந்த 15ந் தேதி நடந்தது. இந்தப்படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். அந்தப் படத்தின் பூஜைக்குக்கூட நடிகர் சூரியா கலந்து கொள்ளவில்லை. சூர்யா இல்லாமலேயே பிற நடிகர்களை வைத்து படப்பிடிப்பை நடத்தினர்.

மீண்டார்

இந்த நிலையில் சூர்யாவுக்கு தற்போது பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என்று வந்துள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் டுவிட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், “அன்பான ரசிகர்களுக்கு, சூர்யாவுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை என்று வந்துள்ளது. அவருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.

இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குணமடைந்ததால் விரைவில் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.