April 16, 2024

Seithi Saral

Tamil News Channel

ஏப்ரல் 1… முட்டாள்கள் தினம் ஆனது எப்படி?

1 min read

April 1 … How did Fools’ Day become?

1.4.2021
இன்று ஏப்ரல் 1ந் தேதி… முட்டாள் தினம் என்று இந்த நாளை கூறுவார்கள். நண்பர்கள் உறவினர்களை ஏமாற்றி அதில் அவர்களை நம்ப வைத்து முட்டாள் ஆக்குவார்கள். அப்படி ஏமாந்தவர்களை ஏப்ரல் பூல் என்று கூறி கிண்டல் செய்வார்கள்.
இது எப்படி முட்டாள் தினமானது? அது ஒரு சுவாரஸ்யமான கதை. இந்த கதை பிரான்ஸ் நாட்டில் நடந்த ஒரு சம்பவம்தான்.
அந்த நாட்டில் இருந்த பழைய காலண்டரை 1562-ம் ஆண்டு போப் கிரிகோரி மாற்றி புதிய காலண்டரை அறிமுகப்படுத்தினார். பழைய காலண்டரில் ஏப்பரல் மாதம்தான் ஆண்டின் தொடக்க மாதம். ஆனால் புதிய காலண்டரில் ஜனவரி மாதம் ஆண்டின் தொடக்கமாக மாறியது. புத்தாண்டு தினமும் ஏப்ரல் 1 ல் இருந்து ஜனவரி 1ந் தேதியாக மாறியது. ஆனால் பலர் ஏப்ரல் 1 ந் தேதி வந்தவுடன் பழைய நினைப்பில் புத்தாண்டு வாழ்த்து கூறினார்கள். அப்படி சொல்பவர்களை முட்டாள் அதாவது ஏப்ரல் பூல் என்று கிண்டல் செய்தார்கள். இந்த கிண்டல் பழக்கம் பிரான்சில் இருந்து இங்கிலாந்து, அமெரிக்காவுக்குப் போய், பிறகு உலகமெங்கும் பரவி ஏப்ரல்-1 என்பது முட்டாள்கள் தினக் கொண்டாட்டமாகவே மாறிப்போனதாம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.