April 19, 2024

Seithi Saral

Tamil News Channel

நேந்திரம் வாழைக்கு பெயர் வந்தது எப்படி?

1 min read

How did the Nendram banana get its name?
கேரளாவில் உள்ள திருகாட்கரை தலத்தில் வாமண கோலத்தில் மகாவிஷ்ணு அருள்பாலிக்கிறார். ஒரு காலத்தில் இந்த பகுதியில் தணிகன் என்ற விவசாயி வாழை மரங்களை நட்டு பயிரிட்டு இருந்தார். ஆனால் அந்த மரங்கள் சரியாக காய்க்கவில்லை. இதனால் வேதனை அடைந்த தணிகன் தன் தோட்டத்தில் வாழைமரங்கள் செழிப்பாக காய்த்து வருமானத்தை தர வேண்டும் என்று வேண்டி தங்கத்தால் வாழைகுலை செய்து கோவிலுக்கு காணிக்கை செலுத்தினான். அதன்பின் அவன் தோட்டத்தில் விளைச்சல் சிறப்பாக இருந்தது.
நேர்த்திகடனாக தங்க வாழைத்தார் கொடுத்தார். நன்றாக விளைந்ததால் அந்த வாழைக்கு நேந்திரம் வாழை என்று பெயர் வந்தது.
தணிகன் காணிக்கையாக செலுத்திய தங்க வாழைக்குலை ஒருநாள் காணாமல் போய்விட்டது. மன்னன் இதுபற்றி பலரிடம் விசாரித்தார். இறுதியில் யோகி ஒருவரை சரியாக விசாரிக்காமல் அவர்தான் எடுத்ததாக கூறி அவரை சித்ரவதை செய்தார். ஆனால் தங்க வாழைத்தார் கோவில் கருவறையில் இருப்பது பின்னர் தெரிய வந்தது.
தனக்கு நேர்ந்த அவமானத்தால் யோகி மன்னனுக்கு சாபமிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்த யோகி பிரம்மராட்சகனாகி இந்த பகுதியில் அலைந்து திரிந்தார். பின்னர் யோகியின் சாபம் தீர அங்கு மூங்கில் கூரை அமைத்து அதில் கோரை புற்களை போட்டு தீ உண்டாக்கினர். பலநாட்கள் அந்த தீ எரிந்த பின் சாப விமோசனம் பெறப்பட்டது.
பின்னர் யோகிக்கு சிறு கோவில் கட்டி பக்தர்கள் தினமும் பூஜை நடத்தி வருகின்றனர்.
-ஆ.பாலன்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.