April 24, 2024

Seithi Saral

Tamil News Channel

சைக்கிள்மீட்டகண்ணாயிரம்/சிறுகதை/ தபசுகுமார்

1 min read

Bicycle Kannayiram / Short Story / Tapasukumar

ஆப்பிள்பழம் வாங்கமார்க்கெட்டுக்குபோன கண்ணாயிரம் ரோட்டின் ஒரத்தில் சைக்கிளை நிறுத்தினார். பாட்டியிடம் ஆப்பிள் வாங்கிவிட்டு சைக்கிளை மறந்து அங்கே விட்டுவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டார். அவரது மனைவி நினைவு படுத்திய பிறகு சைக்கிளை தேடி மார்க்கெட்டுக்குஓடினார். அங்குசைக்கிள்இல்லை. கண்ணாயிரம் அங்கும் இங்கும் தேடினார். எங்கும் கிடைக்கவில்லை. கண்களில் கண்ணீர் கசிந்தது.
ஆப்பிள்பழம் வாங்கிய பாட்டியிடம் போய், பாட்டி என் சைக்கிளை காணவில்லை. யார் எடுத்திருப்பாங்க என்று கேட்டார்.
அதற்குபாட்டி, என்ன சொல்ற சைக்கிளை காணோமா, பத்திரமா விடவேண்டாமா, என்னப்பா நீ என்று பரிதாபப்பட்டார். சைக்கிள் திருட்டு போயிருக்க வாய்ப்பில்லை. நீ நோ பார்க்கிங்கிலே சைக்கிளை விட்டியா, அப்படினா டிராபிக் போலீஸ்காரர்கள் லாரியில் தூக்கிப்போட்டுக் கொண்டு போயிருப்பாங்க, கவலைப்படாதே, பக்கத்திலேதான் டிராபிக் போலீஸ்ஸ்டேசன் இருக்குபோய் கேட்டுப் பாரு என்றுபாட்டி கூறினார். போலீஸ் ஸடேசன் என்றதும் கண்ணாயிரத்துக்கு பயம் தொற்றிக்கொண்டது.
பாட்டி,போலீஸ் ஸ்டேசனில் நான் இது வரைக்கும் கால்எடுத்துவைச்சதில்லை. எனக்குபதட்டமா இருக்கு என்றார்.
உடனேபாட்டி, நீ என்ன கொலையா பண்ணீட்ட, டிராபிக் விதியை மீறி சைக்கிளை நிறுத்தின, அது பெரியதப்புல்ல, அபராதம் போடுவாங்க கட்டிட்டு சைக்கிளை வாங்கிட்டுவா என்றார்.
கண்ணாயிரத்துக்கு போலீஸ் என்றாலே ஒருநடுக்கம். பிடிச்சு உள்ளே வைச்சுப்புட்டாங்கன்னா என்ன பண்ணுறது என்ற பயம் ஏற்பட்டது. கண்ணாயிரம் நடுங்குவதைப் பார்த்தபாட்டி, ஏம்பா பயப்படுறீயா, பழக்கடை பாட்டி அனுப்புனாங்கன்னு சொல்லு, சைக்கிளை கொடுத்துடுவாங்க என்று தைரியம் ஊட்டினார். உடனே, பாட்டி உங்க பெயரை சொன்னா போதுமா, நான் போய்பார்த்துட்டு வர்ரேன். சரி, சைக்கிள் அங்கேதான் நிக்குதன்னு எப்படி உறுதியாக நம்புவது. என்று சந்தேககுரல் எழுப்பினார். அதற்குபாட்டி, அடிக்கடி அடிக்கடி டிராபிக் போலீஸ் கார்கள் வண்டிகளை தூக்கிட்டு போயிருக்காங்க என்றார்.

கண்ணாயிரம் மனசாட்சி பேசியது.
டேய், நீ போலீஸ் நிலையத்தின் வாசலில் கால்வைச்ச தில்லையா, புதுசெருப்பை மீட்க கோவில்அருகே உள்ள போலீஸ் நிலையத்துக்கு நீ போக வில்லையா என்றுகேட்டது. கண்ணாயிரம், தன்மனசாட்சியிடம், எனக்கு வயசாகி விட்டதால் ஞாபகமறதி அதிகமாகிவிட்டது. கண்டுக்காதே என்று சமாதானப்படுத்தினார். மனசாட்சி சமாதானம் ஆகவில்லை.
டேய், சமாளிக்காதடா, அந்தபாட்டி அம்மாவுக்கு இருக்கிற தைரியம் கூட உனக்கு இல்லை. அந்தபாட்டிக்கிட்டதானேநீவிலைகுரைத்துஆப்பிள்வாங்கின, படுவாராகஸ்கல்என்றுமனசாட்சிதிட்டியது. கண்ணாயிரம் மனசாட்சியிடம் திட்டாதப்பா, எனக்கு தைரியம் கொடுப்பா என்று கெஞ்சிகேட்டார்.
மனசாட்சி, போடாபோ அழுகாதே, நிமிர்ந்து நில் நட லெப், ரைட்டு, லெப்ரைட்டு என்றுஅதட்டியது
.
கண்ணாயிரம் நெஞ்சில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு போக்குவரத்து போலீஸ் நிலையத்தை நோக்கி புறப்பட்டார். நெஞ்சு ஒருபக்கம் பக், பக் என்று அடித்துக்கொண்டது. ஆனாலும் வேகமாக நடந்தார். பத்து நிமிடத்தில் போக்குவரத்து போலீஸ் நிலையம் வந்தது. அங்குகூட்டம் அதிகம் இருந்தது. பரவாயில்லை நமக்கு சப்போர்ட்டுக்கு ஆள்இருக்கு என்று மனதை தேற்றி கொண்டார்.
கண்ணாயிரம் பதுங்கி பதுங்கி நிற்பதை பார்த்த போலீஸ்ஏட்டு, யாருய்யாநீ என்று கேட்டார். கண்ணாயிரம் எச்சிலை விழுங்கியபடி, பழக்கடை பாட்டியம்மா அனுப்புனாங்க, அவங்க கடை பக்கத்திலே நிப்பாட்டின சைக்கிள காணலை, அதுதான் இங்கே இருக்கான்னுபார்க்க வந்தேன் என்றார். போலீஸ் ஏட்டு முறைத்தபடி நோபார்க்கிங்கில நிப்பாட்டினீயா, அங்கே ஏகப்பட்டவண்டிக. நிற்குது போய்பாரு என்று அதட்டலாக கூறினார்.
கண்ணாயிரம் வேகமாக அங்கு ஓடினார். அங்கு ஏராளமான சைக்கிள்கள், கார்கள், மோட்டார்சைக்கிள்கள் நின்றன. கண்ணாயிரம் தனது சைக்களை தேடினார்.
அதில். கேஎம் என்று ஏற்கனவே குறியீடு போட்டுவைத்திருந்தார்.
ஒருசைக்கிள் கீழேவிழுந்துகிடந்தது. அதை நிமிர்த்திப்பார்த்தார். அவர் சைக்கிள்தான். அதில் அவர் ஆசையாக முகம்பார்க்கும் கண்ணாடி இல்லை. அற்புதமாக அடிக்கும் பெல்இல்லை. கீழே பார்த்தார் வீல்இருந்தது. டயர், டூயூப்பை காணவில்லை. கண்ணாயிரத்துக்குஅழுகை அழுகையாக வந்தது. என் சைக்கிளிலே டயர் டீப்பை காணவில்லை என்று கத்தினார்.
அருகில் நின்ற ஒருவர், ஏய்யா கத்துற, கார் டயரை காணாம போன நானேஅமைதியாக நிக்கிறேன். நீ ஏன் கத்துற. பேசாம அபராதத்தைகட்டிட்டு போ என்றார்.
கண்ணாயிரம் அப்பாவியாக, அந்த டீப்புடயர் எங்கே போயிருக்கும் என்றுகேட்டார். அதற்கு அவர் லாரியல ஏற்றிக் கொண்டு வந்து இங்கே கீழே இறக்கும் போது காணாமல போயிருது ன்னு நினைக்கிறேன்.
நோபார்க்கிங்கிலே வண்டியைவிட்டது நம்மதப்புதானே என்றார்.
ஆமா,இடம் தெரியாம வண்டியை விட்டது தப்புதான்.
இப்போ இதை எப்படி ஓட்டிட்டு போறது என்று யோசிக்க தொடங்கினார் கண்ணாயிரம்.
ஏட்டையாவிடம் போய், கண்ணாயிரம் என்பதை சுருக்கி கே.எம் என்று குறியீடு போட்டசைக்கிளை கண்டு புடுச்சுட்டேன். சைக்கிள் நிலைமைதான் மோசமாக உள்ளது என்றார் கண்ணாயிரம்.
ஏட்டையா முறைத்தார்.
உங்களை தப்பு சொல்லவில்லை. எங்க தப்புதான் என்றார் கண்ணாயிரம்.
பின்னர் அபராதம் செலுத்திவிட்டு டயர்இல்லாத சைக்கிளை தள்ளிக் கொண்டே வீட்டுக்குவந்தார்.
அப்போது எதிரே சைக்கிளில் வந்த வியாபாரி, பழைய ஈயம்பித்தளைக்கு பேரிச்சம்பழம் என்று கூவியபடி வந்தார். கண்ணாயிரத்துக்கு கோபமாகவந்தது. ஒன்றும். பேசாமல்வந்தார். சைக்கிள்மீட்ட கண்ணாயிரம் என்று யாரும் பாராட்ட மாட்டார்களா என்று ஏங்கியபடிவந்தார். வீட்டுமுன்வந்து சைக்கிளை நிறுத்தினார். அதைப்பார்த்த அவரது மனைவி ஏங்க நீங்க ஆசைஆசையாய். முகம் பார்க்கும் கண்ணாடியைகாணலெ, எங்கே அருமையாகஅடிச்சுட்டு வருவீங்களே அந்தபெல் எங்கே என்று அவரது மனைவி கேட்டார்.
கண்ணாயிரத்துக்கு கோபம் கோபமாக வந்தது. அதைஅடக்கிக்கொண்டு, அது சைக்கிள் மீது லாரிக்காரன் மோதிட்டான் என்றார்.
அவரது மனைவி அதிர்ச்சியுடன் என்ன லாரி மோதிட்டா,என்று கேட்டார். கண்ணாயிரம், இல்லே லாரிக்காரன் வந்த மோட்டார்சைக்கிள் மோதிவிட்டது என்றார்.
அவரதுமனைவிகோபத்துடன் இதுக்குதான் சைக்கிளை எடுத்திட்டுபோகாதீங்க என்றேன். நீங்கள்கேட்கவில்லை. இனி சைக்கிளை எடுத்திட்டுபோகாதீங்க என்று உத்தரவுபோட்டார். கண்ணாயிரம் மனசுக்குள் டயர்டீப்பு இருந்தால் தானே சைக்கிளை ஓட்டமுடியும் என்றார்.
சரி, சரி சைக்கிளை பூட்டிவிட்டுட்டு வாங்க என்றார்.
சரிஎன்று சொல்லி விட்டு சைக்கிளை பூட்டுவதற்கு சாவியுடன் சைக்கிளுக்கு கீழே பார்த்தார். அங் கே பூட்டையும்காணவில்லை. கண்ணாயிரத்துக்கு மயக்கம் வருவதுபோலிருந்தது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.