April 20, 2024

Seithi Saral

Tamil News Channel

20 வருடத்திற்கு பிறகு சூர்யாவுடன் இணையும் ராஜ்கிரண்

1 min read

Rajkiran to reunite with Surya after 20 years

27.2.2021

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் பிரபல ந20 வருடத்திற்கு பிறகு சூர்யாவுடன் இணையும் ராஜ்கிரண்
டிகர் ராஜ்கிரண் 20 வருடத்திற்கு பிறகு சூர்யாவுடன் இணைந்து நடிக்க இருக்கிறார்.

40வது படம்

நடிகர் சூரியா நடித்த நந்தா படம் கடந்த 2001ம் ஆண்டு வெளியானது. அந்தப் படத்தில் சூரியாவுடன் பிரபல நடிகர் ராஜ்கிரண் இணைந்து நடித்தார். அதன்பின் அவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை.
இந்த நிலையில் நடிகர் சூர்யா தற்போது 40 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். இசையமைப்பாளர் இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துவருகிறார். மேலும் சத்யராஜ், சரண்யா, சூரி, தேவதர்ஷினி, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் மாதத்திற்குள் முடித்து படத்தை அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி ஆயுத பூஜை அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப்படத்தில் 20 வருடங்களுக்குப்பிறகு சூர்யாவுடன் ராஜ்கிரண் இணைந்து நடிக்கிறார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.