இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துடன் பிரபல நடிகை ரகசிய திருமணம்?
1 min read
Popular actress secret marriage with music composer Devi Sri Prasad?
6.9.2022
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜிதா பொன்னடா. இவர் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்தை ரகசிய திருமணம் செய்துக் கொண்டதாக தகவல் பரவியது.
தமிழில் ‘செவன்’ படத்தில் நடித்தவர் பூஜிதா பொன்னடா. இவர் தற்போது ‘பகவான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் பூஜிதா பொன்னடாவும், பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் காதலித்து ரகசிய திருமணம் செய்து கொண்டதாக சமீபத்தில் வலைத்தளத்தில் தகவல் பரவியது. பூஜிதா பொன்னடா – தேவி ஸ்ரீபிரசாத் தேவி ஸ்ரீபிரசாத் தமிழில் வில்லு, சச்சின், சிங்கம், கந்தசாமி, வீரம் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தெலுங்கிலும் அதிக படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.
இன்னும் திருமணம் செய்து கொள்ளமல் இருக்கும் தேவி ஸ்ரீபிரசாத், ஏற்கனவே சில நடிகைகளுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்ட நிலையில் தற்போது நடிகை பூஜிதா பொன்னடாவை மணந்துள்ளதாக தகவல் பரவி வந்தது.
வதந்தி
இந்நிலையில் இதுகுறித்து பூஜிதா பொன்னடா அளித்துள்ள விளக்கத்தில், “நான் தேவி ஸ்ரீபிரசாத்தை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக வெளியான தகவல் உண்மை அல்ல. இதுபோன்ற வதந்திகள் எங்கிருந்து உருவாகின்றன என்று புரியவில்லை. நான் யாரையும் காதலிக்கவில்லை, சமூக வலைத்தளத்தில் எனக்கு எதிராக தவறான தகவல்களை பரப்புகின்றனர்” என்றார்.