June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரத்தை பயமுறுத்திய கத்தி/நகைச்சுவை கதை/தபசுகுமார்

1 min read

The knife that scared Kannayiram/Funny story/Tabasukumar

3.8.2025
கண்ணாயிரம் தாம்பரத்திலிருந்து புதுவைக்கு மனைவி பூங்கொடியுடன் வந்தபோது அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதனால் இரவில் வீட்டில் கண்ணாயிரம் மெழுகுவர்த்தி ஏற்றிவைத்தார். காற்றுவராததால் ஜன்னலை திறந்து வைத்தார். வெளியே இரண்டு குண்டர்கள் நின்றதால் பயந்துபோய் ஜன்னலைப் பூட்டினார். விசிறி எடுத்து வீசும்போது மெழுகுவர்த்தி அணைந்ததால் தீப்பெட்டியை எடுக்க கண்ணாயிரம் தடுமாறினார். பூங்கொடி அந்த தீப்பெட்டியை தேடிப்பிடித்து மெழுகுவர்த்தி ஏற்றினார்.
அப்போது கண்ணாயிரம், என்ன பூங்கொடி..இப்படி கரண்டுவராம போயிட்டே..இரவு முழுவதும் விழிச்சுதான் இருக்கணுமா..புழுங்குதே என்றார்.
அதற்கு பூங்கொடி, ஆமா..டிரான்ஸ்பாரம் வெடிச்சுட்டுன்னு சொன்னாங்க.. நைட்டு சரி பண்ணிக்கிட மாட்டாங்க..பேசாம, ஜன்னலையும் கதவையும் திறந்துபோடுங்க.. என்று சொல்ல, கண்ணாயிரம் கோபம் அடைந்தார்.
என்ன பூங்கொடி.. வெளியிலே இரண்டு குண்டங்க.. என்னை கொல்லுறதுக்காக காத்திருக்கானுவ.. கதவை திறந்துபோட்டா உள்ளேவந்திடப் போறானுவ.. இதுஉனக்குப் புரியலையா..என்று கேட்டார்.
அதற்கு அவர், என்ன சொல்லுறீங்க.. அதுக்காக.. இரவு முழுவதூம் புழுக்கத்திலே இரூகாகணுமா.. என்னால முடியாது.. நான் கதவை திறந்துவைக்கப் போறேன் என்றார்.
அதைக்கேட்ட கண்ணாயிரம், ஏய் பூங்கொடி.. ஜன்னலை வேணுமுன்னா திறந்துவை.. அந்த குண்டனுவ எட்டிதானப் பாப்பானுவ.. நான் நாக்கை கடிச்சிக்காட்டி விரட்டிருவன் என்க, பூங்கொடி சரி என்றார்.
கண்ணாயிரம் மெல்ல ஜன்னலைத் திறந்தார்.
குண்டர்கள் இருக்கிறார்களா என்று இருட்டில் பார்த்தார். அவர்கள் அங்குள்ள பஸ்நிறுத்தத்தில் துண்டுவிரித்து படுத்திருந்தனர். உடனே கண்ணாயிரம், அடடா.. இதுவரைக்கும் நின்னுக்கிட்டு இருந்தவங்க இப்போ படுத்திட்டானுவ.. நம்மளை ஒருவழி பண்ணாம விடமாட்டானுவ போலிருக்கே என்று நினைத்தார்.
அவர்கள் எழுந்துவந்தால் எப்படி மிரட்டவேண்டும் என்று நாக்கை கடித்துப் பார்த்தார். அதைப் பார்த்த பூங்கொடி, ஏங்க என்னைப் பார்த்து நாக்கை கடிக்கிறீங்க என்று கத்த, கண்ணாயிரம் உடனே.. தப்பு..தப்பு.. அந்த குண்டர்கள் வந்தா எப்படி நாக்கை கடிக்கணுமுன்னு நடிச்சிப்பார்த்தேன் என்க ,பூங்கொடியோ..கேட்கவில்லை. நீங்க ஏமாத்திரீய..என்னைப்பாத்துதான் நாக்கை கடிச்சீங்க என்றார்.
அதைக்கேட்ட கண்ணாயிரம், ஆ..இல்லை..இல்லை என்க, பூங்கொடியோ.. அப்போ ஜன்னலுக்கு வெளியை நாக்கை கடிச்சி மிரட்டுங்க என்க, கண்ணாயிரம், அய்யோ அந்த குண்டர்கள் பாத்தா நாக்கை வெட்டிப்புடுவானுவ.. அதனால நான் நாக்கையே கடிக்கல என்றார்.
சரி அப்படியே இருங்க என்று பூங்கொடி சொல்ல, கண்ணாயிரம் கீழே உட்கார்ந்தார்.
அப்போது வெளியே படுத்திருந்த குண்டர்களில் ஒருவன்..ஆ..ஹா..ஆ..ஹா என்று பலத்த சத்தத்துடன் பெரிய கொட்டாவி விட்டான். அந்த சத்தத்தைக் கேட்டு கண்ணாயிரம் அரண்டு போனார். அடடா அவன் கொட்டாவியே இவ்வளவு பயங்கரமா இருக்கு.. அவன் நேரில் வந்தா எப்படியிருக்கும்..என்று பயந்தார்.
அதைப்பார்த்த பூங்கொடி..ஏங்க..நீங்க மட்டும் சாதாரணமா..நீங்களும் பயங்கர சத்தத்துடன் கொட்டாவி விடுங்க என்க, கண்ணாயிரமும்..ஆமா..நான் என்ன சாதாரண ஆளா என்றபடி வாயைப் பிளந்து ஹா..ஹா ஓ..ஓ.ஓ என்று கொட்டாவி விட்டார்.
அதில் கண்ணாயிரத்துக்கு வாய்சுளுக்கிக் கொண்டது. அவர் வாய் திறந்தபடி, பூங்கொடி வாயை மூடமுடியல.. வலிக்கு என்று கத்த, பூங்கொடி அவர் தலையில் ஓங்கி ஒரு தட்ட, கண்ணாயிரம் வாயை மூடினார்.
அப்போது வெளியே படுத்திருந்த குண்டன் ஒரு பாட்டுபாடினான்..
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா..
ஆறிலும் சாவு
நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா..
என்று பாட, கண்ணாயிரம் விழித்தார்.
என்ன அச்சம் என்பது மடமையடா என்கிறான்..நான் மறுபாட்டு பாடமாட்டேனா..என்ற கண்ணாயிரம்,
ஒரு பாட்டை பாடினார்.
நான் பாத்தா பைத்தியக்காரன்
உன் பாட்டனுக்கும் வைத்தியம் பார்ப்பேன் என்று அதட்டலாக பாடினார்.
உடனே குண்டன் மற்றொரு பாடலைப் பாடினார்..
ஆகாயத்திலே தொட்டில் கட்டும்
மங்கை உன்னை கண்டேன்..
என்ற பாடலைப் பாட, கண்ணாயிரத்தூக்கு பயம் கொடுத்தது.பூங்கொடியோ பயப்படாதீங்க..நீங்க ஒரு பேய்பாட்டு பாடுங்க விடாதீங்க என்க,
கண்ணாயிரம், நானே வருவேன்..என்றபாடலைப் பாடினார்.
அப்போது குண்டன் வேகமாக, அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே..
இச்செஜகத்தில் உள்ளோர் எதிர்த்து வந்தபோதிலும் அச்சம் இல்லை அச்சம் இல்லை என்பது இல்லையே என்று பாடினார்.
அதைக்கேட்ட கண்ணாயிரம், என்ன அச்சம் இல்லை என்கிறான். நம்ம அதுக்கு ஒரு பாட்டுப்போட்டாதான் சரிவருவான் என்றவாறு, என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னால வெளிவரும் தயங்காதே..
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே என்று பாடினார்.
அந்த நேரத்தில் வெளியே இருந்து ஒரு பெரியவர்,யார்ரா அவன்..அரைகுறையா பாடிக்கிட்டு..தூக்கத்தை கெடுத்துக்கிட்டு..இனி பாட்டுவந்துச்சி..கல்வரும் பேசாம வாயைப் பொத்திக்கிட்டு தூங்குங்க என்று கத்த ,கண்ணாயிரம் வாயைப் பொத்தி அமைதியானார்.
பூங்கொடியும் ஆமாங்க..இனி பாடாதீங்க..கல்வரும் என்று சொல்ல கண்ணாயிரம் வாயைப் பொத்தி படுத்துக்கொண்டார். பூங்கொடியும்..ஏங்க தூங்குங்க, காலையிலே பாப்போம் என்றபடி கட்டிலில் போய்படுத்துக் கொண்டார்.கண்ணாயிரம்,ம்..பாடக்கூடவிடமாட்டேங்கிறாங்க..என்றபடி கட்டிலுக்கு அடியில் போய் படுத்துக்கொண்டார்.
தன்னை அறியாமல் தூங்கிவிட்டார். காலையில்தான் விழித்தார். கரண்டுவந்துவிட்டது. அப்பாட..பேன் ஓடுன பிறகுதான் நிம்மதி..முதலில் போனை ஜார்ஜ் போடணும் என்று ஜார்ஜ் போட்டார். பூங்கொடி மோட்டார் போடு என்று சொல்ல அவர் வேகமாக மோட்டார் போட்டார். உடனே கண்ணாயிரம், தண்ணி நிரம்பட்டும் பாத்ரூம் போகணும் என்றபடி அங்கும் இங்கும் நடந்தார்.

திடீரென்று ஒரு சந்தேகம் வந்தது. அந்த குண்டனுங்க போயிருப்பானுவளா இல்லையா என்று ஜன்னல்வழியாக மெல்ல எட்டிப்பார்த்தார். அங்கே குண்டர்கள் எழுந்து உட்கார்ந்திருந்தார்கள். அருகில் ஒருவர் கத்தியை கையில்வைத்து கூர்பார்த்துக்கொண்டிருந்தார்.
போச்சுடா..இரண்டு குண்டன்கள் இருக்காங்கன்னுப் பாத்தா மூணாவது ஒருத்தன் வந்திருக்கான்..கையில் கத்தியோட நிக்கான்..கதவை திறந்தோம் தொலைஞ்சோம்.. தீவிரவாதிகள் என்னைக் கொல்ல மூணுபேரை அனுப்பி இருக்காங்க.. நான் என்னசெய்வேன்.. வயிற்றைக்கலக்குதே என்றபடி பாத்ரூமுக்குள் ஓடினார்.(தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *